தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனத்தை முட்டிய யானை: கூடலூரில் வாகன ஓட்டிகள் கிலி - கூடலூரில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி: கூடலூரிலிருந்து மற்ற கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

elephant blocks road in nilgiris

By

Published : Nov 8, 2019, 9:01 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்வது வழக்கம். இரவு எப்போதும்போல் சாலையில் வாகனங்கள் செல்லும்பொழுது காட்டு யானை ஒன்று வழிமறித்து நின்றது. இதனால் இருபுறமும் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

சுமார் ஒரு மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த அந்தக் காட்டு யானை அதன் முன் இருந்த கனரக சரக்குவாகனத்தை நோக்கி அருகில் வந்தவுடன் அதிலிருந்த ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து வாகனத்தை நிறுத்திவிட்டார். பின் வாகனத்தின் அருகே முகப்பு கண்ணாடி வரை வந்து முட்டிப்பார்த்த அந்த யானையால் ஓட்டுநரும் கிளீனரும் கதி கலங்கினர். பிறகு யானை சிறிது தூரம் சென்றவுடன் வாகனத்தை பின்நோக்கி நகர்த்திச் சென்றனர்.

வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

அடிக்கடி யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்துவந்தாலும் ஒரே இடத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாகனங்களை வழிமறித்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர்.

இதையும் படிங்க: 'என்னை நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்' - நிரவ் மோடி மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details