தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் மின்கம்பியில் சிக்கி யானை, கரடி மற்றும் காட்டுப்பன்றி அடுத்தடுத்து உயிரிழப்பு! - குன்னூர் வனவிலங்குகள் உயிரிழப்பு

நீலகிரியில் தனியார் எஸ்டேட் அருகில் மின்கம்பியில் சிக்கி யானை, கரடி மற்றும் காட்டுப்பன்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.

நீலகிரியில் மின்கம்பியில் சிக்கி யானை, கரடி மற்றும் காடுப்பன்றி உயிரிழப்பு...
நீலகிரியில் மின்கம்பியில் சிக்கி யானை, கரடி மற்றும் காடுப்பன்றி உயிரிழப்பு...

By

Published : Jul 14, 2022, 11:13 AM IST

நீலகிரிமாவட்டம், குன்னூர் அருகே உள்ள மூப்பர்காடு ஓலேன்ட் தனியார் தோட்டப்பகுதிகளில் பராமரிப்பு இல்லாமல் காட்டு மரங்களும் புதர்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் காட்டுயானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு ஜூலை 12ஆம் தேதி தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானை மற்றும் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததாகவும் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து இரவு நேரம் ஆகிவிட்டதாலும், மேலும் ஏதேனும் வன விலங்குகள் இறந்துள்ளதா? என்பது குறித்து வன ஊழியர்கள் உதவியுடன் வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலில் மின் கம்பி மாட்டி மின்சாரம் பாய்ந்த நிலையில் கரடி ஒன்றும் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த மூன்று வனவிலங்குகளும் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை கள இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் பொறுப்பு செல்வகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் உடல்கூராய்வு செய்து ஜேசிபி உதவியுடன் யானை மற்றும் காட்டுப்பன்றியை புதைத்தனர். பின், கரடியை தீயிட்டு எரித்தனர்.

நீலகிரியில் மின்கம்பியில் சிக்கி யானை, கரடி மற்றும் காட்டுப்பன்றி அடுத்தடுத்து உயிரிழப்பு

வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் மின் வயர்கள் தாழ்ந்து சென்றதால் யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடி என அடுத்தடுத்து வனவிலங்குகள் உயிரிழந்திருப்பது வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: பலா மரங்களை நோக்கி படையெடுக்கும் யானைகள்

ABOUT THE AUTHOR

...view details