நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள சில மலை கிராமங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை மின் துறை ஊழியர்கள் சரி செய்யாதது தொடர்பாக நீலகிரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வையாளர் வாசு நாயர் பிரேம்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், தரைகுறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.
ஊராட்சித் தலைவரைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் - 900 பேர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
நீலகிரி: மாவட்ட ஊராட்சித் தலைவரைக் கண்டித்து மின் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 900 பேர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊராட்சித் தலைவரை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதனைக் கண்டித்து மின் துறை ஊழியர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஊராட்சித் தலைவர் பொன்தோஸ் மீது மாவட்ட மேற்பொறியாளர் சார்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு உதவ மனமிறங்கி வருமா தமிழ்நாடு அரசு?