தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதியை மீறி அமைக்கபட்ட மின்வேலிகள் அகற்றப்படும் - நீலகிரி மாவட்ட வன அலுவலர் - நீலகிரி மாவட்ட வன அலுவலர் ட

நீலகிரி: சின்னகுன்னூர், எப்பநாடு பகுதிகளில் யானைகள் நடமாடும் பகுதி மற்றும் விதிகளை மீறி அமைக்கபட்டுள்ள மின்வேலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கபடும் என நீலகிரி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

nilgiri
nilgiri

By

Published : Oct 29, 2020, 9:40 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள பெம்பட்டியில் இரவில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி இறந்தது. இறந்த யானையை இரவோடு இரவாக தீயிட்டு எரிக்க முயன்றதுடன் மண்ணை கொண்டு மூடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, புதைக்கபட்ட யானையின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்யபட்டது. இந்நிலையில், அப்பகுதி வனத்துறை ஊழியர்கள் மீது தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. வனகாப்பாளராக பணியாற்றி வந்த மகேந்திரபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். வனவர் ஜாவித் பணியிட மாற்றம் செய்யபட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா கூறுகையில், "கவனக் குறைவாக இருந்த வனத்துறை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சின்னகுன்னூர் மற்றும் எப்பநாடு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் கண்காணிக்கபடும். ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விதிகளை மீறி அமைக்கபட்டுள்ள மின்வேலிகள் அகற்றப்படும்" என்று தெரிவித்தார்.

விதியை மீறி அமைக்கபட்ட மின்வேலிகள்

இதையும் படிங்க:பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details