தமிழகத்தில் மக்களவை, 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட வாரியாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி - Election Awarness Program
நீலகிரி: 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நீலகிரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு
இதில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யாவின் அறிவுறுத்தலின் படி, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.