தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் இ-பாஸ் முறை தொடரும்: ஆட்சியர் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் வழங்கபட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

By

Published : Sep 1, 2020, 9:14 PM IST

Updated : Sep 1, 2020, 9:22 PM IST

ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா
ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா

தமிழ்நாட்டில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதகை செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, “நீலகிரி மாவட்டத்திற்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும். எனவே, பிற மாவட்ட மக்கள் தேவையின்றி வரவேண்டாம். உள்ளூர் மக்கள் எளிதில் இ-பாஸ் பெறும் வகையில், உள்ளூர் அடையாள அட்டை ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே எளிதில் இ-பாஸ் கிடைக்க வசதி செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வரவேண்டாம். கட்டுபாடுகளுடன் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 50 விழுக்காடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். இதுவரை மாவட்டத்தில் 57, 476 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரடங்கு தளர்வு: தமிழ்நாட்டில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்!

Last Updated : Sep 1, 2020, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details