தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
”சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாது. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. அவசர, அவசிய வேலை காரணங்களுக்காக பிற மாவட்டங்களிலிருந்து நீலகிரி வருவோருக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உள்ளூர் மக்களுக்கும் இ-பாஸ் முறை தொடர்வதால், நீலகிரி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அத்தியாவசியப் பணிகளுக்குக்கூட செல்ல முடியாமல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரிக்கு மட்டும் தளர்வு அளிக்காமல் இருப்பது தனித்தீவு போன்று உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இ- பாஸ் தளர்வு அளிக்கப்படாதது குறித்து வேதனைத் தெரிவிக்கும் நீலகிரி மாவட்ட மக்கள் எனவே, உள்ளூர் மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் தளர்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்