நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகளுக்கு அடுத்தபடியாக பலா, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன.
பலாப்பழத்தில் புரதம், வைட்டமின் B, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இங்கு விளைவிக்கும் பழங்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தற்போது கரோனா காரணமாக மாவட்ட எல்லைகள் முடங்கியுள்ளதால், இது போன்ற பழங்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.