தமிழ்நாடு

tamil nadu

போதையில் ஆடையின்றி பக்கத்து வீட்டிற்குள் புகுந்த அதிமுக முன்னாள் எம்பி பதவி பறிப்பு

நீலகிரி மாவட்ட அதிமுக அவைத் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்த முன்னாள் எம்பி சி. கோபாலகிருஷ்ணன், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By

Published : Nov 16, 2021, 8:48 AM IST

Published : Nov 16, 2021, 8:48 AM IST

Updated : Nov 16, 2021, 2:02 PM IST

ex admk mp gopalakrishnan, drunken viral video fame, dismissed from party, admk party, அதிமுக முன்னாள் எம் பி, நீலகிரி மாவட்ட அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கட்சி பதவியிலிருந்து நீக்கம், அதிமுக கட்சி
முன்னாள் எம்.பி. சி.கோபாலகிருஷ்ணன்

நீலகிரி: குடிபோதையில் சிக்கிய முன்னாள் எம்பி சி. கோபாலகிருஷ்ணன் வகித்துவந்த மாவட்ட அவைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவராகப் பதவி வகித்துவந்தார் டாக்டர் சி. கோபாலகிருஷ்ணன். முன்னாள் எம்பியான இவர், குடிபோதையில் ஆடையின்றி பக்கத்து வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததாகக் காணொலி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து குன்னூர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து, இவர் மீது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அதிமுக அறிவிப்பு

இந்த நிலையில், அவைத்தலைவர் பதவியிலிருந்து இவர் விடுவிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்தாரா முன்னாள் எம்பி?

Last Updated : Nov 16, 2021, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details