தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி - Dogs Exhibition in Nilgiris

நீலகிரி: குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 250 நாய்கள் கலந்துகொண்டன.

Dogs Exhibition held at Coonoor
Dogs Exhibition held at Coonoor

By

Published : Feb 3, 2020, 8:53 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னுாரிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கெனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக காவல் நிலையம், ராணுவம், ரயில்வே காவல் நிலையம் ஆகியவற்றில் குற்றங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

மேலும் உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட், ராம்பூர்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபர்மேன், பீகிள், இங்கிலீஷ் பாய்ன்ட்டர், கோல்டன் ரீட்ரைவர், பீகிள்ஸ், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட 42 வகைக்கும் மேற்பட்ட 250 நாய்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டன.

குன்னுாரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

இந்த நாய்களுக்குக் கட்டளைகளுக்குக் கீழ்படிதல், மோப்பத் திறன், நாய்களின் ரகம், ஓடும் திறன், நாய்களின் வயது, எடை, உயரம் உள்ளிட்ட திறமைகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் கலந்தகொண்டனர்.

இதையும் படிங்க:

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details