தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழிப்புணா்வுக்கு வராத மருத்துவர் - வீடியோ காண்பித்த தலைவர் - Doctor who does not come to awareness

நீலகிரி: கால்நடைகள் குறித்த விழிப்புணா்வு முகாமில் மருத்துவர் வராததால், செல்லிடப்பேசியில் வீடியோ காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பஞ்சாயத்துத் தலைவரை பொதுமக்கள் எள்ளி நகையாடினர்.

விழிப்புணா்வு வீடியோ காண்பிக்கும் பஞ்சாயத்து தலைவர்
விழிப்புணா்வு வீடியோ காண்பிக்கும் பஞ்சாயத்து தலைவர்

By

Published : Feb 26, 2020, 6:40 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பேரட்டி ஊராட்சி சார்பாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற பகுதிகளில் கிராமப்புற பகுதிகளில், கால்நடைக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கால்நடை மருத்துவர் வரவில்லை.

வீடியோ காண்பித்து விழிப்புணர்வு செய்த பஞ்சாயத்து தலைவர்.

இதன் காரணமாக, மக்கள் மூன்றரை மணி நேரம் காத்திருந்தனர். பின்பு, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மக்கள் வெளியேற முயற்சித்தனர். அப்போது, பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தனது தலைமையில் விழிப்புணர்வு முகாமை தொடங்கினார். அதன்பின்பு, அவர் தனது செல்லிடப்பேசியில், யூடியூப் மூலம் கோமாரி நோய்த் தடுப்பு ஊசி குறித்த விழிப்புணர்வு வீடியோவை மக்களுக்கு காண்பித்தார். அதனை பார்த்த கால்நடை வளர்ப்போர் எள்ளி நகையாடினர்.

இதையும் படிங்க: '21 அரிவாள் மீது நடந்த பூசாரி' - ஆன்மிகமும் அறிவியலும்

ABOUT THE AUTHOR

...view details