நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கோவை சாலையில் உள்ள கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்கள் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளன. தமிழ்நாடு - கேரள எல்லையையொட்டி இந்தப் பகுதிகள் இருப்பதால், சமீப காலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து கெத்தை வனப்பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சாலையின் நடுவே யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அதைப் பார்த்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி எடுத்துச் சென்று, யானைகள் சென்றவுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.