நீலகிரி:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று (நவ.19) மழையால் பாதிக்கப்பட்ட வீசி காலனி, RK புரம், எல்லநள்ளி உள்ளிட்ட பகுதிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா (MP A Rasa), வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் (Minster K. Ramachandran) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினர். இடியும் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் உதகை படகு இல்லம் சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை ஆய்வு செய்தனர்.