தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் நூதன போராட்டம் - கவுன்சிலர்

குன்னூர் அருகே திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து அக்கட்சி கவுன்சிலர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் நூதன போரட்டம்
திமுக தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் நூதன போரட்டம்

By

Published : Sep 29, 2022, 12:08 PM IST

நீலகிரி:ஜெகதளா பேரூராட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும், தலைவரின் சகோதரர் பினாமி தலைவராக செயல்படுவதாகவும் கூறி திமுக கவுன்சிலர்கள் 4 பேர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பேரூராட்சி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் பங்கஜம் தலைமையில் நேற்று (செப்.28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் திமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர்களும், காங்கிரஸை சேர்ந்த 2 கவுன்சிலர்களும், அதிமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

திமுக தலைவரை கண்டித்து நூதன போரட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்

இதில் திமுகவைச் சேர்ந்த நான்கு கவுன்சிலர்கள் தங்களது கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டனர். பேரூராட்சியில் ஊழல் மற்றும் பினாமி தலைவர், போன்ற திமுக தலைவரின் போக்கை கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்தார். இந்த பேரூராட்சியில் திமுக இரண்டு கோஷ்டிகளாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்...

ABOUT THE AUTHOR

...view details