நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளர் வினோத் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது.
குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி! - குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி
குன்னூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றிபெற்றார்.

குன்னூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றிபெற்றார்
குன்னூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி
அமமுக வேட்பாளர் கலைச்செல்வனும் மக்களிடம் நல்ல செல்வாக்கைப் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று (மே 2) தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் இருபது சுற்றுகள் முடிவில் நான்காயிரத்து 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 61 ஆயிரத்து 820 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வினோத் 57 ஆயிரத்து 715 வாக்குகளும் பெற்றிருந்தனர்.