தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலர் கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: கரோனா பணியாளர்களுகாக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

By

Published : May 19, 2020, 2:07 PM IST

உதகை தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 124ஆவது மலர் கண்காட்சி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மலர் கண்காட்சிக்காக தயார் நிலையில் வைக்கபட்ட லட்சக்கணக்கான மலர்களை யாரும் காண முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு துறையினர் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மே 18ஆம் தேதி முதல் வருவாய் துறையினர் அவர்களது குடும்பத்தினருடன் மலர் கண்காட்சியை காண அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் இந்த கண்காட்சியை காண வந்தவர்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் இணைந்து பார்வையிட்டார்.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது;

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கிற்கு தளர்வு இருந்தாலும் தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது. மேலும் வெளியூரிலிருந்து ஆன்லைனில் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். விஐபிகள் வந்தாலும் தனிமைப்படுத்தபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details