தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 10, 2020, 4:05 AM IST

கரோனா வைரஸ் பொது ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் முழுவதும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள், ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.
இதில், கரோனா வைரஸ் பொது ஊரடங்கின் காரணமாக உதகையில் பாதிக்கப்பட்டுள்ள 200 மாற்றுத்திறனாளிளுக்கு அத்தியாவசிய பொருட்கள், 1, 000 ரூபாய் நிவாரண வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 13 ஆயிரம் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூபாய் 1, 000 வழங்கப்படும் எனவும் பிற மாவட்டங்களில் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கும் ரூ.1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண் தாதா தலைமறைவு - காவல்துறை வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details