பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு 144 நடைமுறைச் சட்டம் அமலில் உள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரெயலிக் காம்பவுண்ட் பகுதியில் டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதன் காரணமாக அப்பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் - ஆட்சியர் - நீலகிரி: கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக போர்க்கால அடிப்படை
நீலகிரி: கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சி த் தலைவர் உத்தரவின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக பொதுமக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள்
கரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள மருந்தகங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டு அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கான அன்றாட அத்தியாவசிய பொருள்களை எந்தவித சிரமமுமின்றி அப்பகுதியிலேயே வாங்கிக்கொள்ள தன்னார்வலர்களை மாவட்ட நிர்வாகம் நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.