தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு: நீலகிரி மாவட்ட ஆட்சியர் - Nilgiris tamil news

கரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு
கரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு

By

Published : May 18, 2021, 7:34 PM IST

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, "கரோனா தொற்று நீலகிரி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 350-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை அமல்படுத்தபட்டு இருந்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக சுற்றி திரிவதால் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து இன்று (மே.18) முதல் இ-பாஸ் கட்டாயம் தேவை. மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 12 கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

கரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு

கூடலூரில் 200 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் நாளை (மே.19) திறக்கப்படும். 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக இருப்பில் உள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் வழக்கு பதியப்படும்" என்றார்.

இதையும் படிங்க:தஞ்சையில் ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் அதிரடி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details