நீலகிரி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குறும்பர், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கோழிக்கறி, சின்ன குறும்பாடி, பெரிய குறும்பாடி, புதுக்காடு உள்ளிட்ட நான்கு கிராமங்களில் குறும்பர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.
பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டு வந்த இந்தப் பகுதி மக்கள் ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் குன்னூரில் உள்ள தன்னார்வ குழுவினர் சார்பில் ஓர் ஆண்டிற்கான ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.