நீலகிரி:தமிழ்நாட்டில் சமீப காலமாக கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாகப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதித்து கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் தலமான நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 3 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் தடை விதித்து, அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அம்ரித், "கரோனா தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று (டிச.31) முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்' என்றார்.
நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா? மேலும், அவர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் இன்று (31-ஆம் தேதி) இரவு நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், வழிப்பாட்டுத் தலங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் உணவகங்கள், விடுதிகளில் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆட்சியர், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 3 ஆண்டு வழக்கு: விஜய் விஷ்வா, மிர்னா மேனன் திருமணம் செய்துகொண்டது உண்மையா?