தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய ஊட்டி தியேட்டர் வளாகத்தில் கடைகள் அதிரடியாக அகற்றம்! - theater

நீலகிரி: ஊட்டியில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு திரையரங்கில் விதிமீறலை மீறி செயல்பட்டு வந்த கடைகளை வருவாய் துறையினர் இன்று அகற்றினர்.

விதிமீறலை மீறி செயல்பட்டு வந்த கடைகள் அகற்றம்

By

Published : Jul 5, 2019, 8:32 PM IST

நீலகிரி மாவட்டத்தில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணியில் உதகை நகராட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உதகையில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு திரையரங்கு வளாகத்தில் கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததுள்ளது.

இந்த கடைகளில் தனியார் சார்பில் உணவங்கள் மற்றும், இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த திரையரங்கின் உரிமத்தை புதுபிக்க திரையரங்கு நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, திரையரங்கில் பொதுமக்கள் வெளியேறும் வழியை மறித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதால், திரையரங்கில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி பொதுபணித்துறை தடையில்லா சான்று வழங்க மறுத்துள்ளது.

விதிமீறலை மீறி செயல்பட்டு வந்த கடைகள் அகற்றம்

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைவராக உள்ள இத்திரையரங்கில் உள்ள விதிமீறலை அகற்ற வருவாய் துறை முடிவெடுத்து கடைகளை நடத்தி வந்தவர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கபட்டது. நோட்டீஸ் வழங்கி 24மணி நேரமாகியும் கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை காலி செய்யாததால் மாவட்ட வருவாய் துறையினர் கடைகளில் உள்ள பொருட்களை நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அகற்றினர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details