தமிழ்நாடு

tamil nadu

சிறுதானிய உற்பத்தி குறைந்ததால் நோய்கள் பெருகுகிறது - விஞ்ஞானி விஸ்வநாதன் வேதனை

நீலகிரியில் சிறுதானியங்கள் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டதால், நோய்கள் வளர்ந்து விட்டதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 14, 2023, 11:24 AM IST

Published : Feb 14, 2023, 11:24 AM IST

நீலகிரியில் சிறுதானியங்கள் உற்பத்தி குறைந்ததால் நோய்கள் பெருகுகிறது
நீலகிரியில் சிறுதானியங்கள் உற்பத்தி குறைந்ததால் நோய்கள் பெருகுகிறது

நீலகிரியில் சிறுதானியங்கள் உற்பத்தி குறைந்ததால் நோய்கள் பெருகுகிறது

நீலகிரி: குன்னூரில் உள்ள கோதுமை ஆராய்ச்சி மையத்தில் சிறு விவசாயிகளுடனான சிறுதானிய விளைச்சலை ஊக்குவிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம், கோதுமை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி விஸ்வநாதன், மண்டல தலைவர் பி. நல்லதம்பி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி விஸ்வநாதன் "பழங்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் சக்தி மிகுந்த சிறுதானியங்களான, கம்பு, சோளம் திணை, போன்ற சிறுதானியங்கள் அதிக அளவு விளைவிக்கப்பட்டன. ஆனால் தற்போது பணப்பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறுதானியங்களை விளைவிப்பதை விவசாயிகள் மறந்து விட்டனர்.

இதன் காரணமாக மக்களுக்குச் சர்க்கரை இதய நோய் உள்ளிட்ட பரம்பரை வியாதிகள் வந்துவிட்டதாகத் தெரிவித்தார். எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சிறுதானியங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நோயில்லா சமுதாயம் உருவாக மலைத் தோட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். மேலும் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவருகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: Kodanad case: கொடநாடு வழக்கு விசாரணை; 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!

ABOUT THE AUTHOR

...view details