தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கவுன்சிலர்கள் தர்ணா - நீலகிரியில் உட்கட்சி பூசல்? - உட்கட்சி பூசல்

ஜெகதளா சிறப்பு நிலை பேரூராட்சியில் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து அக்கட்சி கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நீலகிரியில் உட்கட்சி பூசல்
நீலகிரியில் உட்கட்சி பூசல்

By

Published : Dec 30, 2022, 4:38 PM IST

நீலகிரியில் உட்கட்சி பூசல்

நீலகிரி: ஜெகதளா சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த பத்து மாதங்களாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து அக்கட்சி கவுன்சிலர்கள் இன்று (டிச. 30) தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 8 வார்டு கவுன்சிலர் திலீப், பேரூராட்சி தலைவரின் தம்பி வெளியில் இருந்து தலைவரை இயக்குவதாக தெரிவித்தார். அவர் யாருக்கு பேரூராட்சியின் பணிகள் தரவேண்டும் என்று சொல்கிறாரோ, அவருக்கு தான் பணி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றார்.

அதுவும் குறிப்பிட்ட கமிஷன் இருந்தால் மட்டுமே வேலை ஒதுக்கப்படுவதாக கூறினார். இதற்கு செயல் அலுவலர் துணைபோவதாகவும், நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறும் கிராமங்களுக்கே மீண்டும் மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்களுடைய கிராமங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு ஏற்றார் போல் கமிஷன் வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details