தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் கனமழை முன்னெச்சரிக்கை: பேரிடர் மீட்பு குழு உதகை வருகை! - heavy rain warning in Nilgiris

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீட்பு பணிக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது போரிடர் மீட்பு குழு உதகை வந்துள்ளது.

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை
நீலகிரியில் கனமழை எச்சரிக்கை

By

Published : Jul 3, 2023, 9:53 PM IST

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை

நீலகிரி: வரும் ஜூலை 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் நீலகிரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் 42 அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் மற்றும் 457 சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் மாவட்டத்தின் 283 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டரியபட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக போக்குவரத்து, சாலையில் முறிந்து விழும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை உடனடியாக சரிசெய்யும் வகையில், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேரிடர் மீட்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட மேல்குந்தா, இத்தலார், பாலகொலா, முள்ளிகூர் ஊராட்சிகள், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகளின் பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடப்பாரை, மண்வெட்டி, கயிறு, பார்ஷா எந்திரம், ஒலிபெருக்கி, ஜேசிபி வாகனம், மணல் மூடைகள் ஆகியவை தயாராக உள்ளன. மேலும், கூடலூர் பகுதிகளும் மீட்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் தற்போது, பேரிடர் மீட்பு குழுவினர் பிரவின் தலைமையில் 43 பேர் உதகை வந்துள்ளனர்.

அவர்கள் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆலோசனை படி இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் மஞ்சூர் பகுதிக்கும் மற்றொரு குழுவினர் கூடலூர் பகுதிக்கும் புறப்பட்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதனை எதிர்கொள்ள மாவட்டத்தில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இதையும் படிங்க:படிக்கும் பள்ளியில் கழிவறை கூட இல்லை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details