தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு தென்மேற்கு பருவ மழையின் போது அபாயகரமான பகுதிகள் குன்னூரில் 15 இடங்களும் கோத்தகிரியில் 25 இடங்களும் உள்ளன என சார் ஆட்சியர் தெரிவித்தார்.

குன்னுரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம்
குன்னுரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம்

By

Published : Jul 19, 2022, 9:34 PM IST

நீலகிரி:குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க (WHATSAPP) குழுக்கள் அமைத்து ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்ததால் எவ்வாறு தெரிவிப்பது என்றும் சார் ஆட்சியர் தலைமையில் பயிற்சி முகாம் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு தென்மேற்கு பருவ மழையின் போது நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் 15 இடங்களும், கோத்தகிரியில் 25 இடங்களும் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குன்னூரில் எம்.ஜி.ஆர்.நகர், கன்னிமாரியம்மன் கோயில், பர்லியார், மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள கட்டபெட்டு பாரதிநகர், இந்திரா நகர் உள்ளிட்ட அபாயகரமான பகுதிகள் ஆகும்.

குன்னுரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம்

மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக் கிழக்கு தென்மேற்கு பருவ மழை போது ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாச்சியர் சிவக்குமார், கோத்தகிரி வட்டாச்சியர் காயத்திரி உட்பட அரசு அதிகாரிகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து: ஓட்டுநரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ வைரல்

ABOUT THE AUTHOR

...view details