திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் சுற்றுலாத் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களில் கடை வைத்திருப்பவர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், வழிகாட்டிகள் எனப் பல்வேறு தரப்பினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பெருந்தொற்று காரணமாக, சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனிடையே அன்றாட பிழைப்பிற்கு வழி இல்லாததால் தங்களுக்கு உதவக்கோரி, அரசுக்குப் பல முறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.