தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரமான உணவுகள் வழங்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்பு துறை! - நீலகிரியில் உணவகங்களுக்கு எச்சரித்த உணவு பாதுகாப்பு துறை

நீலகிரி: அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் உணவகங்களில் தரமான உணவுகளை வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரித்துள்ளார்.

Department of Food Safety
உணவக உரிமையாளர் சங்க கூட்டம்

By

Published : Dec 18, 2019, 7:43 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உணவக உரிமையாளர் சங்க கூட்டம் சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் கலந்துகொண்டார். பின்னர், பேசிய அவர், ’நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர், உள்ளூர்வாசிகள் என லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் உணவுக்காக, கூடலூர், உதகை, குன்னூர் , கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்களையே நம்பி வருகின்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக உணவகங்களில் தரம் இல்லாத உணவுகளை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. ஆகையால், அனைத்து உணவகங்களும் சமையலுக்குத் தேவையான தர நிர்ணயம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். ஊழியர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

உணவக உரிமையாளர் சங்க கூட்டம்

உணவகங்களுக்கு உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உணவகங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில், ஏதேனும் சட்ட விதிமீறல்கள் ஏற்பட்டிருந்தால் உணவகங்களின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏதேனும் உணவகங்களில் தரம் குறைவான உணவு வழங்குவதை அறிந்தால், உணவு பாதுகாப்பு அலுவலகங்களில் உள்ள கட்டணம் இல்லாத (94440 42322) எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் அந்த உணவகங்கள் மீது மூன்று நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: உண‌வு பாதுகாப்புத்துறை ரெய்டு; காலாவ‌தியான‌ பொருள்க‌ள் பறிமுத‌ல்!

ABOUT THE AUTHOR

...view details