நீலகிரி:மாவட்டத்தில் பழைய பேருந்துகளே அதிகம் இயக்கப்படுவதால், மலைப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் அவ்வப்போது பழுதடைந்து நிற்பது தொடர் கதையாகி உள்ளது.
மேலும், குன்னூர் நகரப்பகுதியில் இயக்கப்படும் நகரப்பேருந்துகள் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இவை சாலையில் திடீரென்று நின்றுவிடுவதால் பயணிகள் பேருந்தை தள்ளிவிட்டு இயக்க செய்கின்றனர்.
பழுதாகும் அரசுப்பேருந்துகளால் அவதிப்படும் நடத்துநர்கள்
இந்நிலையில் குன்னூர் - பேரக்ஸ் - அரசுப்பேருந்து லெவல் கிராசிங் பகுதியில் நின்றது. பயணிகள், நடத்துநர்கள் பேருந்தை தள்ளிவிட்டும் இயக்க முடியாமல் நீண்டநேரம் சிரமப்பட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் மாற்றுப்பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நகரப் பகுதியில் புதிய அரசுப்பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஓரிரு நாள்களில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்’ - வீராணம் உதவி செயற்பொறியாளர்