தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2021, 10:39 AM IST

ETV Bharat / state

குன்னூர் மார்க்கெட் கடைகளில் வாடகை உயர்வைக் கண்டித்து கருப்புக் கொடி

நீலகிரி: குன்னூர் மார்க்கெட் கடைகளில் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து கடைகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பைக் காட்ட வியாபார சங்கம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: குன்னூர் மார்க்கெட் கடைகளில் பல மடங்கு வாடகை உயர்த்தியதை கண்டித்து. கடைகளில் கருப்பு கொடி கட்ட போவதாக வியாபார சங்கம் முடிவு செய்துள்ளது.
நீலகிரி: குன்னூர் மார்க்கெட் கடைகளில் பல மடங்கு வாடகை உயர்த்தியதை கண்டித்து. கடைகளில் கருப்பு கொடி கட்ட போவதாக வியாபார சங்கம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி, மார்க்கெட் பகுதியில் 910 கடைகள் உள்ளன. தற்போது திடீரென வாடகை மறுவரையறை எனக்கூறி பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியினர் மார்க்கெட் கடை வியாபாரிகளுக்கு எவ்வித நலனும் செய்யவில்லை என அங்குள்ள கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குன்னூர் மார்க்கெட் கடைகளில் வாடகை உயர்வைக் கண்டித்து கருப்புக் கொடி

மேலும் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 23ஆம் தேதி முதல் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவதாக வியாபாரிகள் தீர்மானம் செய்துள்ளனர்.

நியாயமான வாடகை நியமிக்கப்படாதவரை அனைத்துக் கடைகளிலும் தொடர்ந்து கருப்புக் கொடி பறக்கும் எனவும், அனைத்து வணிகர்களும் கருப்பு பேட்ச் அணிவதாகவும் தீர்மானித்துள்ளதாக குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க :'63 ஆண்டுகளாக கமல் மக்களோடுதான் இருக்கிறார்' - ஸ்ரீபிரியா

ABOUT THE AUTHOR

...view details