தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பு வசதி இல்லாமல் நடைபெறும் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி! - பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நீலகிரி

நீலகிரி: குன்னூா் பகுதியில் 100 அடி உயரமுள்ள தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததை, மீண்டும் அமைப்பதற்கான கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்புச் சுவா் அமைக்கும் பணி
தடுப்புச் சுவா் அமைக்கும் பணி

By

Published : Dec 15, 2019, 2:19 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூா் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்த சுமாா் 100 அடி உயரமுள்ள தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. இதனை மீண்டும் அமைப்பதற்கான கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் தலைக் கவசம், தடுப்புகள் எதுவும் இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடும்போது விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள பொறியாளா், ஒப்பந்ததாரா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதையும் படிங்க: மேற்கூரை அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கிய 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

ABOUT THE AUTHOR

...view details