தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புற்றுநோயை குணப்படுத்தும் பழம்: ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்! - ஆயிரம் ரூபாய்

நீலகிரி: புற்றுநோயை குணப்படுத்தும் முள் சீத்தாப்பழத்தின் விளைச்சல் அமோகமாக உள்ளது, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

custard apple

By

Published : Jun 27, 2019, 5:08 PM IST

நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றியுள்ள பகுதிகள் வாசனை திரவிய பயிர்கள் அதிகமாக விளையும் காலநிலை தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் புற்றுநோயை குணப்படுத்தும் முள் சீத்தாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த பழங்கள் குறித்த முக்கியதுவம் தெரியாத நிலையில் தங்களது சொந்த தேவைக்காக வீடுகளில் இந்த மரங்களை வளர்த்துள்ளனர்.

புற்றுநோயை குணப்படுத்தும் பழம்: ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்!

இந்த மரங்களை வளர்க்கும் வீடுகளை தேடி கேரளா, கர்நாடகா மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் அதிகமானோர் படையெடுத்து வருகின்றனர். இதனால் தற்போது ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இப்பழம் விற்பனை செய்யப்படுகிறது.

புற்றுநோய் உள்ளவர்கள் இந்த பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் ரசாயன சிகிச்சையான ஹீமோதெரபியைவிட 10 ஆயிரம் மடங்கு தீவிரமாக செயல்பட்டு புற்றுநோய் கிருமியை அழிக்கும். மருந்திற்கான தேவை அதிகரிப்பதால் பழத்தின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

மேலும், புற்றுநோயால் அதிகமானோர் பாதிக்கபட்டு வரும் நிலையில் இப்பழத்தின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இதுபோன்று நோயை குணப்படுத்தும் பழத்தை விவசாயம் செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details