நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மொத்தமாக 17 ஏலங்கள் நடைபெற்றன. இதில், 1.75 கோடி கிலோ தேயிலை துாள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் மொத்த வருமானம் ரூ.175.47 கோடி கிடைத்துள்ளது.
கடந்தாண்டு இதே நான்கு மாதங்களில், 1.55 கோடி கிலோ தேயிலை துாள் விற்பனையானதில், 144.40 கோடி ரூபாய் மொத்த வருமானமாக இருந்தது.
இதனை ஒப்பிடுகையில், கடந்தாண்டை விட நடப்பாண்டில் மொத்த வருமானம் ரூ.31.07 கோடி கூடுதலாக கிடைத்துள்ளதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் சராசரி விலையாக கிலோவுக்கு தேயிலையின் விலை ரூ.93.16 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.100.27 ஆக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டைவிட விற்பனை 21.52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேயிலை விற்பனை வருமானம் ரூ 31 கோடி அதிகரித்துள்ளதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேயிலை விற்பனை வருமானம் ரூ 31 கோடி அதிகரிப்பு இது குறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறுகையில், "வர்த்தகர்களிடையே தேயிலையின் தேவை அதிகரித்த காரணத்தால், விற்பனையின் அளவு உயர்ந்துள்ளது", என்றார்.