தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளின் கண்களை வசீகரிக்கச் செய்யவிருக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா! - Cunnoor

நீலகிரி: குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 2,500 மலர் தொட்டிகளில் பல்வேறு அரிய வகை மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப்பயணிகளின் கண்களை வசீகரிக்கச் செய்யவிருக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா
சுற்றுலாப்பயணிகளின் கண்களை வசீகரிக்கச் செய்யவிருக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா

By

Published : Apr 5, 2021, 8:18 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவர லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

சுற்றுலாப்பயணிகளின் கண்களை வசீகரிக்கச் செய்யவிருக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா

இந்த ஆண்டு 3.10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது, இங்கு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலான இடங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இங்குள்ள தோட்டக்கலைக்கு சொந்தமான கண்ணாடி மாளிகையில், தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்து பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

இதில் 2,500 மலர் தொட்டிகளில் பல்வேறு அரிய வகை மலர்கள் நடவு செய்யப்பட்டன. பெக்கோனியா, போயின் சேட்டியா உள்பட 30 வகைகளில் பூக்கள் பூத்து குலுங்குகிறது. கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்ட மலர் தொட்டிகள், சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.

கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் தொட்டிகள், விதைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details