தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாசார ஓவியங்கள் - பயணிகளை கவரும் ரயில்வே நிலையம்! - நீலகிரி மாவட்டச் செய்திகள்

நீலகிரி: குன்னூர் ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ள கலாசார ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது.

nilgiri
nilgiri

By

Published : Dec 17, 2019, 7:31 PM IST

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1883ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை ரயில் இயக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் ரயில் நிலையத்தின் ரயில்பாதை ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் நீளமானது ஆகும்.

குன்னூர் ரயில் நிலையம்

அதுமட்டுமல்லாமல், ரயில் நிலையத்தின் மலை ரயிலை 'யுனெஸ்கோ', கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து சிறப்பு சேர்த்தது.

இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் தற்போது வனவிலங்குகள், இயற்கை, கலாசார ஓவியங்கள் உள்ளிட்டவைகள் வரையப்பட்டு அங்கு வரும் பயணிகளை கவர்ந்துவருகின்றன. குறிப்பாக அங்கு வரையப்பட்டுள்ள வில்வித்தை, கபடி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற ஓவியங்கள் கூடுதல் கவனம் பெற்றுவருகிறன்றன.

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் போக்குவரத்துச் சேவை!

ABOUT THE AUTHOR

...view details