நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படுவதால் குடியிருப்புகளும், மக்களின் உடைமைகளும் சேதமாகி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பல காலமாக அங்குள்ள ஆறுகள், ஓடைகளில் கட்டப்படும் குடியிருப்புகளும், கடைகளும் தான்.
நீலகிரியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற கணக்கெடுக்கும் பணி தீவிரம்!
நீலகிரி: குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளை இரு வாரத்திற்குள் அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் குடியிருப்புப் பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
nilgiris
இந்த சூழலில், உயர் நீதிமன்றம் ஆற்றோரங்களில் கட்டியுள்ள கட்டடங்களை இடிக்க அண்மையில் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆற்றோரங்களிலும் கட்டியுள்ள கடைகளை இரண்டு வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்போது குடியிருப்புகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருவதால் ஆக்கிரமிப்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.