நீலகிரி : உதகை அருகே உள்ள காந்தள் பகுதியை சேர்ந்த ராபின் (29), மோனிஷா (24) தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. கூலி வேலை செய்து வரும் இந்த தம்பதியினர் வறுமையை காரணம் காட்டி மூன்று வயதான முதல் பெண் குழந்தையை மோனிஷாவின் அக்கா பிரவீனாவிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துள்ளனர்.
குழந்தைகளை விற்ற தம்பதியினர் கைது! - nilgris latest news
உதகையில் வறுமையை காரணம் காட்டி பெற்ற குழந்தைகளை தம்பதியினர் விற்றச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![குழந்தைகளை விற்ற தம்பதியினர் கைது! தம்பதியினர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12615142-thumbnail-3x2-nil.jpg)
அந்தக் குழந்தையை பிரவீனா பராமரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பிரவீனாவின் வீட்டிற்கு சென்ற ராபின் அவர் வளர்த்து வரும் தனது மூன்று வயது பெண் குழந்தையை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த பிரவீனா உடனடியாக தனியார் அறக்கட்டளையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக ராபின் வீட்டுக்கு சென்ற அலுவலர்கள் மற்ற இரண்டு குழந்தைகள் குறித்து விசாரித்தனர். அப்போது ராபின் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் உடனடியாக அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் புகாரளித்தனர்.
பின்னர், உதகை காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: உணவு கொடுக்கச் சென்ற நேரத்தில் 60 சவரன் நகைகள் கொள்ளை