நீலகிரி:குன்னூர் தனியார் விடுதியில் தங்கி 180 பள்ளி மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சில மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், விடுதியில் உள்ள 21 மாணவிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானது. எனவே, உடனடியாக அனைத்து மாணவியரும் தனிமைப்படுத்தப்பட்டு, குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து விடுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாணவிகள் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள், அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதுவரை நீலகிரியில் 33 ஆயிரத்து 692 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் 15 முதல் 20 பேர் நோய்த் தொற்று உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் விடுதியில் 21 மாணவிகள் பாதிக்கப்பட்டது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மழைக்குப் பின்னர் வழக்கம்போல் இயங்கிய சென்னை பள்ளிகள்