தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: கிராம ஊராட்சி அளவிலான விழிப்புக் குழு திட்டம் தொடக்கம் - விழிப்புக் குழு திட்டம்

நீலகிரி: கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முதன் முறையாக கிராம ஊராட்சி அளவிலான விழிப்புக் குழு திட்டத்தை நீலகிரி கண்காணிப்பு அலுவலர் தொடங்கி வைத்தார்.

Coronation Prevention: Village Panchayat Awareness Committee Launches!
Coronation Prevention: Village Panchayat Awareness Committee Launches!

By

Published : Jul 1, 2020, 5:04 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு அலுவலராக சுப்பிரயா சாகுவை தமிழ்நாடு அரசு நியமித்ததுள்ளது. இதனையடுத்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை குறித்து முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக கிராம ஊராட்சி அளவிலான விழிப்புக் குழு திட்டத்தை இன்று கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று, நஞ்சநாடு கிராமத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், முகக்கவசம் அணிவது, வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வருபர்களைக் கண்காணித்து தகவல் கொடுப்பது, கைகளைத் தொடர்ந்து கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கபட்டன.

ABOUT THE AUTHOR

...view details