தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு - 943 காவல்துறையினர் பாதுகாப்பு பணி - நீலகிரி ஊரடங்கு உத்தரவு

நீலகிரி: ஊரடங்கு உத்தரவு காரணமாக 943 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு

By

Published : Mar 26, 2020, 12:06 AM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஊடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திலுள்ள 16 சோதனை சாவடிகளும் மூடப்பட்டது.

அரசு பேருந்துங்கள், தனியார் பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டது. இந்த சோதனை சாவடிகளில் மூன்று வேளை அடிப்படையில், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர், சுகாதாரத்துறை, கால்நடை, வருவாய் துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு

மேலும் நகர் பகுதிகளில் இரண்டு சுழற்சி முறை அடிப்படையில் காவல்துறைபினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். இதில் மாவட்ட உதவி ஆய்வாளர் தலைமையில் 943 பேர் சுழற்சி முறை அடிப்படையில் காவல்துறையினரால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பணி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளை தவிர, பொது இடங்களில் முகாந்திரம் இல்லாமல், ஐந்து பேருக்கு மேல் நடமாடினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி குறிப்பில் தெரிவித்தார். கரோனா வைரசை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு அளித்து, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு' - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details