நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், சில நாள்களாக படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், கேரட் மற்றும் தேயிலைத் தொழிலாளர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் அதன்படி தற்போது கேரட் கழுவும் நிலையங்களுக்கே சென்று அந்தத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கேரட் சுத்திகரிப்பு மையங்களுக்கு செல்லும் சுகாதாரத் துறையினர் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவருகின்றனர்.
இன்று மட்டும் 3500 தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல தேயிலைத் தோட்டத் தொழிளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.