நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களாவில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த வழக்கில் தொடர்புடையதாக 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் குன்னூர் கிளைச் சிறையிலும், மற்ற எட்டு பேர் பிணையிலும் உள்ளனர்.
இந்த வழக்கை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குன்னூர் கிளைச் சிறையில் உள்ள வாளையார் மனோஜுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.