தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சோதனைக்காக சேகரித்த ரத்த மாதிரிகள் சாலையில் வீச்சு! - nilagiri latest news

நீலகிரி: கரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் காட்டேரி எல்லைப் பகுதியில் வீசப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டச் செய்திகள்  கரோனா சோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்  nilagiri district news  nilagiri latest news  corona blood samples throwen
கரோனா சோதனைக்காக சேகரித்த ரத்த மாதிரிகள் சாலையில் வீச்சு

By

Published : Aug 5, 2020, 12:19 AM IST

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் நபர்களுடைய ரத்த, சளி மாதிரிகள் குன்னூர் வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டேரி எல்லைப் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையில் வைத்து சேகரிக்கப்பட்டது. தற்போது, இந்த மாதிரி சேகரிப்பு நிலையம் பர்லியார் சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டேரி பகுதியில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் அப்பகுதியிலேயே வீசப்பட்டுள்ளது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வண்டிச் சோலை கிராம நிர்வாகம் சுகாதாரப் பணியில் முறையாக ஈடுபடுவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

கரோனா சோதனைக்காக சேகரித்த ரத்த மாதிரிகள் சாலையில் வீச்சு

பொது இடத்தில் வீசப்பட்டுள்ள ரத்த மாதிரிகளை மாவட்ட சுகாதாரத் துறை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:201 மி.மீ மழை: வெள்ளத்தில் மூழ்கிய பழங்குடியின கிராமம்!

ABOUT THE AUTHOR

...view details