தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி வருவதற்கு புதிய கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி: மாவட்டத்திற்குள் வருவதற்கு இ-பாஸ் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்ச் சந்திப்பு
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Aug 27, 2020, 6:08 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டத்தை சார்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர தொடங்கி உள்ளனர். மேலும் வெளிமாநில மக்களும் வர தொடங்கியுள்ளனர். இதனால் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதையடுத்து, பொதுமக்களிடையே கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கட்டாயம் தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு நாடகம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்ச் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “கரோனா அதிகரிப்பை தடுக்க போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இ-பாஸ் முறை எளிமையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவது அதிகரித்து உள்ளது. அதனால் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இன்று (ஆக. 27) முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்படும் அனைத்து இ-பாஸ்களும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பது சரிபார்த்த பின் அனுமதிக்கும் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க...விவசாயத்தை மேம்படுத்தும் சேலம் மாணாக்கர்களின் புதிய கண்டுபிடிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details