நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் கொலக்கம்பை அருகே உள்ள தூதூர்மட்டம் கிராமத்தில், 53 பேருக்கு புதிதாக கரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனாவின் கோரப்பிடியில் குன்னூர்! - குன்னூரில் ஐந்து நாட்களுக்கு முழு ஊரடங்கு
நீலகிரி: குன்னூர் அருகே 53 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதியில் ஐந்து நாள்கள் தொடர்ந்து முழு ஊரடங்கைக் கடைபிடிக்க அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் கிராமத்தில் உள்ளோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பு அதிகரித்த கிராமத்தில் வெளியாட்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்திற்குள் உள்ள மக்கள் அவசியமின்றி வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிராமத்தில் ஐந்து நாள்களுக்கு தொடர்ந்து முழு ஊரடங்கு கடைபிடிக்க அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இப்பகுதிகளில் உள்ள எஸ்டேட்களில் தேயிலை தொழிலை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!