தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் கிளை சிறையில் 9 பேருக்கு கரோனா தொற்று! - corona news

நீலகிரி: குன்னூர் கிளை சிறையில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : May 4, 2021, 8:14 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான வாழையார் மனோஜ்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே தினத்தில் 66 வயதுடைய மற்றொரு கைதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உதகை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து கிளை சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகளுக்கும் அங்கு பணியாற்றும் சிறை வார்டன்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதால் ,கிளை சிறைச்சாலையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் சிறை வார்டன்கள் மற்றும் மற்ற கைதிகள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ரங்கசாமி அமைச்சரவையில் பாஜக - நிர்மல் குமார் சுரானா

ABOUT THE AUTHOR

...view details