நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, கேரட், உருளைக் கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இந்த ஆண்டு அதிகளவில் கேரட் பயிரிடப்பட்டது.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் கடந்த ஒரு மாதமாக கேரட் அறுவடை செய்யப்பட்டு, இயந்திரங்களில் கழுவி வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் நாள் ஒன்றுக்கு சென்னை, மதுரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 180 டன் வரை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டாலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது.
கேரட் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
இதனால் தற்போது ரூ.10 முதல் ரூ. 20வரை மட்டுமே விவசாயிகளுக்கு விலை கிடைப்பதால், அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மூன்றாம் தர கேரட் ரகங்கள் கீழே கொட்டப்பட்டு வீணாகி வருகிறது.
இதையும் படிங்க:அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ஊடக உரிமையாளர் கைது!