தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் கரோனா கணக்கெடுக்கும் பணிகள் தொய்வு!

நீலகிரி: குன்னூர் பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிகளுக்கு வராததால் வீடு வீடாக சென்று கரோனா வைரஸ் குறித்த ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

corona census process getting slow in nilgiri district because of  Anganwadi Staff Ignoring their works
corona census process getting slow in nilgiri district because of Anganwadi Staff Ignoring their works

By

Published : Apr 12, 2020, 11:34 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்குள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

குன்னூரில் கரோனா கணக்கெடுக்கும் பணிகள் தொய்வு

இதற்காக, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள், அரசு திட்ட ஊழியர்கள் என 250 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறவிருந்த இந்தக் கண்காணிப்பு பணிகள் பெரும்பாலான அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு வராததால் தற்போது தொய்வடைந்துள்ளது. அங்கன்வாடி ஊழியர்களின் இந்தச் செயல் மாவட்ட நிர்வாகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details