நீலகிரி மாவட்டம், குன்னூர் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பிலும் குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் சார்பிலும் மார்க்கெட், விபி தெருவில் உள்ள அனைத்து கடை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கரோனா தொற்று பாதுகாப்பு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகளில் விளம்பர அட்டைகள் வழங்கப்பட்டது.
குன்னூரில் கரோனா விழிப்புணர்வு அட்டை வழங்கும் நிகழ்ச்சி! - Corona Awareness
நீலகிரி: குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கரோனா விழிப்புணர்வு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை குன்னூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் தொடக்கி வைத்தார். இதற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.ஏ.ரகீம், காய்கறி வியாபாரிகள் சங்கதலைவர் விஜயராகவன், செயலாளர் மது, ராஜ்குமார், ராமு, மணிகண்டன், கண்ணன், நகைக் கடை வியாபாரிகள் சங்க தலைவர் உசேன் அலி, செயலாளர் ஈஸ்வரன், ஜவுளி வியாபாரிகள் சங்க செயலாளர் குமார் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தகுந்த இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.