தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2020, 1:23 PM IST

ETV Bharat / state

கரேனா முகமுடியுடன் துரத்தி வருபவர்களை கண்டு அலறியடித்து ஓடும் மக்கள்!

நீலகிரி: குன்னூரில் மாஸ்க் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கரோனா வைரஸ் தாக்கும் காட்சிகளை ஊழியர்கள் தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

sdsd
dsd

நாட்டை உலுக்கும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், பாதுகாப்பு துறையினருடன் இணைந்து பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அப்பகுதியில் நடத்தி வருகின்றனர்.

ஊழியர்கள் தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு

இவர்கள் கரோனா முகமூடி அணிந்துகொண்டு பொதுஇடங்களில் மாஸ்க் இல்லாமல் சாலையில் நடுமாடுபவர்களை பிடிப்பதுபோலவும், கிருமி நாசினி தெளித்தால் கரோனா மிரண்டு போவதை போலவும் தத்ரூபமாக நடித்து அசத்துகின்றனர். இவர்கள் வருவதை பார்த்தால் அப்பகுதி மக்களும், சிறுவர்களும் ஓட்டம் பிடிக்கின்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கிலும் அடங்காத கடத்தல்... உணவு டெலிவரி வண்டியில் இரண்டு தலை பாம்பு!

ABOUT THE AUTHOR

...view details